பெண்களுக்கான முக்கிய டென்னிஸ் தொடர்கள்: இன்றைய போட்டிகளின் முடிவுகள்!

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரை முன்னிட்டு பல்வேறு முன்னோட்ட டென்னிஸ் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு தற்போது அவுஸ்ரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் தொடர் மற்றும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடர்களின் முடிவுகளை பார்க்கலாம்.

முதலாவதாக அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்சும், அவுஸ்ரேலியாவின் அரினா ரோடியோனோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டை அரினா 6-2 என எளிதாக கைப்பற்றி, ஸ்லோன் ஸ்டீபன்ஸ்சுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், அரினாவுக்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், அந்த எதிர்பார்ப்புக்களை பொய்யாக்கிய அரினா, இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி செட்டை 6-2 என இலகுவாக கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் முன்னணி வீராங்கனையான ஆஷ்லே பார்டியும், ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவும்  மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை அனஸ்தேசியா 6-4 என போராடி கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

எனினும், இதன்பிறகு மீண்டெழுந்த ஆஷ்லே பார்டி, இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா 1 செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில், ஆக்ரோஷமாக விளையாடிய ஆஷ்லே பார்டி, செட்டை 7-5 என போராடிக் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்ததாக ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்.

முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் கர்பீன் முகுருசாவும், சீனாவின் வாங் யஃபனும் மோதினர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டை கர்பீன் முகுருசா 6-1 என எளிதாக கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில். இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். எனினும், இறுதிவரை போராடிய கர்பீன் முகுருசா, செட்டை 7-5 என போராடி கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இன்னொரு முதல் சுற்றுப் போட்டியொன்றில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ்சும், கிறிஸ்டினா மெக்ஹேல்லும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய எலிஸ் மெர்டென்ஸ், 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிக் பேஷ்: அடிலெய்ட் அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் அணி அபார வெற்றி!

Tue Jan 14 , 2020
x பிக் பேஷ் ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் […]

விழாக்கள்