ஸ்ரீலங்கா பொலிஸார் இருவர் பலி!

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்ட வீரகொல்லாவ பிரதேசத்தைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (வய- 45) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மற்றுபொரு பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் சென்றிருந்தார். சொந்த ஊரான அனுராதபுரம் தளாவ பகுதியை சேர்ந்த எஸ்.ரத்னாயக்க (வயது-28) நேற்று திங்கட்கிழமை (13) அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இவர்களும் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா? என பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்ப்பு!

Tue Jan 14 , 2020
x இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அலிஸ் வேல்ஸ், இன்று […]

விழாக்கள்