மோடிக்கு எதிராக பேசினால் உயிருடன் எரிக்கப்படுவீர்கள்! உத்தரபிரதேச அமைச்சர் எச்சரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசியசர்களை உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அலிகார் நகரத்தில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணைமுதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் ரகுராஜ் சிங், வரி செலுத்துபவர்களின் பணத்தில் படித்த பின், முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி மற்றும் உத்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பேசி வருகிறார்கள். அப்படி பேசியவர்கள் உயிருடன் எரிக்கப்படுவீர்கள் என பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் அதியா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக தலைவர் கலந்து கொண்டு,பொதுச் சொத்துகளை யாராவது சேதப்படுத்தினால் சுட்டு வீழத்துவோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பத்திரிகைகளின் பொய்யான செய்திகளுக்கு ஹரி மற்றும் வில்லியம் மறுப்பு!

Mon Jan 13 , 2020
x சகோதரர்களான தம்மைப் பற்றி பத்திரிகைகள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என்று கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இளவரசர் வில்லியம் தம்மைப் புறந்தள்ளியதனால் ஏற்பட்ட கசப்பினாலேயே ஹரியும் […]

விழாக்கள்