வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் பெற்றோரை நேரில் சந்தித்த அமைச்சர்!

அஸர்பைஜானில் உயிரிழந்த மாணவிகள் மூவரினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக தலா 15 இலட்சம் ரூபா நிதியை வழங்க தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சரை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அஸர்பைஜானின் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயின்ற இலங்கை யுவதிகள் மூவர் தங்களது தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த மாணவிகளின் உடல்களை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக அரசு குறித்த நிதியை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மோடிக்கு எதிராக பேசினால் உயிருடன் எரிக்கப்படுவீர்கள்! உத்தரபிரதேச அமைச்சர் எச்சரிக்கை!

Mon Jan 13 , 2020
x பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசியசர்களை உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி […]

அதிகம் படித்தவை

விழாக்கள்