கொல்கத்தா துறைமுகம் ‘சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்’ என மாற்றம்- மோடி அறிவிப்பு!

கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தா துறைமுகக் கழகத்தின் 150 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

முன்னதாக இன்று காலை கொல்கத்தாவின் ஹவுரா நகரில் உள்ள பேளூர் மடத்தில் நடந்த தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கொல்கத்தா துறைமுகத்தின் 150 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதன்போது, “கொல்கத்தா துறைமுகம் இந்திய நாட்டின் தொழில், ஆன்மிகம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டார். இந்த துறைமுகத்தை நவீன இந்தியாவின் அடையாளமாக மாற்றுவது நமது கடமை எனவும் அவர் கூறினார்.

மேலும், கொல்கத்தா துறைமுகத்திற்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கல்வியாளரும், பாரதீய ஜனசங்கத்தை தோற்றுவித்தவருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படுகிறது என்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்தமைக்கு நானும் ஒரு காரணம்: மாலிங்க!

Sun Jan 12 , 2020
x இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரை இழந்தமைக்கு தானும் ஒரு காரணம் என இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இந்தியத் தொடரை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள நிலையிலேயே அவர் […]

விழாக்கள்