ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட மூவர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.

புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத் தளபதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்புத் தாக்குதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக காஷ்மீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொல்கத்தா துறைமுகம் ‘சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்’ என மாற்றம்- மோடி அறிவிப்பு!

Sun Jan 12 , 2020
x கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொல்கத்தாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தா […]

விழாக்கள்