நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளின் குறைதீர் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன!

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள குறைதீர் மனுக்கள் எதிர்வரும் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகிய 5 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டிருந்தார். இவருக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நால்வருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதனை எதிர்த்து குறித்த குற்றவாளிகள் கருணை மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த நால்வரும் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7 மணிக்கு திஹார் சிறையில் தூக்கிலிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காசிம் சோலெய்மனியை இலக்குவைத்த அதேநாளில் மற்றொரு ஈரான் தளபதியும் இலக்கு!

Sat Jan 11 , 2020
x ஈரான் புரட்சிப் படைத் தளபதி காசிம் சோலெய்மனியை இலக்குவைத்த அதேநாளில் யேமனில் மற்றொரு ஈரான் தளபதியையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனில் உள்ள ஈரானின் முக்கிய படைத் […]

விழாக்கள்