மறைமுக தேர்தலில் முறைகேடு : தி.மு.க குற்றச்சாட்டு!

மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி தி.மு.கவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

திமுக சார்பில் டி.ஆர்.பாலு,  டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டு மனுவில், தி.மு.க வெற்றி பெறும் இடங்களில் பிரச்சினை செய்து தேர்தல் நிறுத்தப்படுகிறது. பல இடங்களில் தேர்தல் அலுவலர்கள் வரவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களுக்கான  ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோரை தெரிவுசெய்வதற்கான மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது.

பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக,  திமுக இடையே போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளின் குறைதீர் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன!

Sat Jan 11 , 2020
x நிர்பயா கொலைக் குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள குறைதீர் மனுக்கள் எதிர்வரும் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி மற்றும் […]

விழாக்கள்