திருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்!

திருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள் நடைபெற்றன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) சமுத்திரத்தில் தீர்த்தோற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு பெரியகல்லாறிலுள்ள இரண்டு ஆலயங்களின் தீர்த்த உற்சவங்கள், இந்துமாசமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றன.

பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய தீர்த்தோற்சவங்கள் இவ்வாறு நடைபெற்றன.

மேலும் ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சென்று சமுத்திரக்கரையில் அங்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று, பெருமளவான அடியார்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதேபோன்று மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தின் திருவெம்பாவை தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் கடந்த 01.01.2020 அன்று ஆரம்பமாகிய திருவெம்பாவை விரதமானது ஆறாம்நாள் பிட்டுக்கு மண்சுமந்து உற்சவமும் நேற்று முன்தினம் திருவாசக முற்றோதலும் அதனை தொடர்ந்து நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளிற்கும் நான்கு ஜாம பூஜையும் அதிகாலையில் ஆருத்திரா தர்சனமும் இடம்பெற்றன.

நேற்று அதிகாலை ஆலயத்தில் திருப்பொன்சுண்ணம் இடிக்கப்பட்டு, வசந்த மண்டப பூஜை இடம்பெற்று மாணிக்கவாசகர் கொம்புச் சந்திப்பிள்ளையார் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், வள்ளி தெய்வானை, சமேத முருக பெருமான் ஆகியோருக்கு இந்து சமுத்திரத்தில்  தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் பணப் பரிசு! யாழில் விசேட திட்டம்!

Sat Jan 11 , 2020
x மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் அக்குடும்பத்திற்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்கு இதுவரை யாரும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட […]

விழாக்கள்