விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கு நடவடிக்கை!

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

‘சௌபாக்கிய தெக்ம’ எனப்படும் வளமான தொலை நோக்கு என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மூலம் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய சிறுபோகம் முதல் 2 ஹெக்டயர் வரையில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டத்தின் கீழ் உள்ளூர் நெல் உற்பத்தியாளர்களை வலுவுடன் மேம்படுத்துவதற்காக பல்வேறு அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் உர நிவாரண முறைக்கு பதிலாக நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உற்பத்திக்கு தேவையான இரசாயன மற்றும் சேதன பசளையை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்!

Sat Jan 11 , 2020
x திருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள் நடைபெற்றன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) சமுத்திரத்தில் தீர்த்தோற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு பெரியகல்லாறிலுள்ள இரண்டு ஆலயங்களின் தீர்த்த உற்சவங்கள், […]

விழாக்கள்