தனது முதலாளித்துவ நண்பர்களுக்காகவே மோடி ஆலோசனை நடத்தினார் – ராகுல் காந்தி!

பிரதமர் நரேந்திர மோடி பணக்காரர்கள் மற்றும் தனது முதலாளித்துவ நண்பர்களுக்காகவே வரவு செலவு திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வருடத்திற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அதிகளவிலான கரிசனை கொண்டுள்ளதுடன், பொருளாதார வல்லுநர்களிடம் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளார்.

இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி மேற்படி விமர்சித்துள்ளார்.

குறித்த பதிவில் தொடர்ந்து தெரிவித்த அவர், விவசாயிகள்,  மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள்,  அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள்,  சிறு வர்த்தகர்கள்,  நடுத்தர வர்க்கத்தினர் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அவதூறு வழக்கு : பிணையில் விடுதலையானார் நெல்லை கண்ணன்!

Fri Jan 10 , 2020
x பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழறிஞர் நெல்லை கண்ணன் பிணையில் விடுதலையாகியுள்ளார். இந்த  விவகாரம் தொடர்பில் தான் பேசிய கருத்துக்கள் […]

அதிகம் படித்தவை

விழாக்கள்