அவதார் உலகத்தின் புதிய பகுதிகளை காணப் போகிறீர்கள்!

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘அவதார்’. லைட்ஸ்டார்ம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் ரெட்பாக்-டுனீ என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில், சைமோன் ஃப்ராங்கலேனின் இசையில் வெளியான இந்த படம் ஹிந்தி, தமிழ் என பெரும்பாலான இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளிவரக் காத்திருக்கும் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வருகிறார். இந்த படம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவதார் படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவதார் 2 படத்தில் நீங்கள் பண்டோராவிற்கு மட்டும் போகப் போவதில்லை. நீங்கள் இன்னும் அவதார் உலகத்தின் புதிய பகுதிகளை காணப் போகிறீர்கள், என்றும் குறிப்பி

ட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களில் வித்தியாசமான எடிட்டிங் உடன் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளனர் படக்குழுவினர். இது அவதார் படத்தின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திய சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் லொஸ்லியா!

Wed Jan 8 , 2020
x பிக்பொஸ்-3 இல் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. பிக்பொஸ்-3 வீட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் லொஸ்லியாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரையில் பட […]

விழாக்கள்