இளம்பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை சைப்ரஸ் நீதிமன்றம் வழங்கியது!

சைப்ரஸில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானதாகப் பொய்க் குற்றச்சாட்டுத் தெரிவித்த 19 வயதான பிரித்தானிய இளம்பெண்ணுக்கு மூன்று வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் இத்தண்டனைக்கு எதிரான முறையீட்டை அவர் மேற்கொள்வார்  என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சைப்ரஸில் இஸ்ரேலிய இளைஞர்கள் குழு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறிய பிரித்தானிய இளம்பெண் குற்றவாளி எனக் கண்டறிந்த நீதிமன்றம் அவருக்கு நான்கு மாத சிறைத் தண்டனையையும் மூன்று வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் வழங்கியுள்ளது.

டார்பிஷையரைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் தெரிவிக்கையில்; பயங்கரமான தாக்குதலினால் தான் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

குறித்த இளம்பெண்ணின் தாயார் நீதிமன்றத்திற்கு வெளியே ஆதரவாளர்களிடம் தெரிவிக்கையில்; தனது மகள் பிரித்தானியாவுக்குத் திரும்புகிறார் என்று கூறினார்.

தனது குடும்பத்தினரையும் அவரது சட்டக் குழுவையும் கட்டியணைத்த இளம்பெண் கண்ணீருடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

பிரித்தானிய இளம்பெண் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்புவார் என்று அவரது வழக்கறிஞர் லூயிஸ் பவர் கியூசி தெரிவித்தார். மேலும் தான் குற்றமற்றவள் என்பதில் அப்பெண் பிடிவாதமாக உள்ளதாகவும் அவர் உண்மையைச் சொன்னார் என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவும், வழக்கை சைப்ரஸின் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால், இந்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் வரை கொண்டுசெல்வோம் என்றும் வழக்கறிஞர் லூயிஸ் பவர் கியூசி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோலெய்மனியின் இறுதி ஊர்வல சனநெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு!

Tue Jan 7 , 2020
x அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ உயர் தளபதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 48 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக […]

விழாக்கள்