ஆன்ட்ரூ ஹார்ப்பர் கொலை – குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

தேம்ஸ் வலி (Thames Valley) பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் படுகொலைக் குற்றத்தை குற்றவாளி ஒப்புக்கொண்டார்.

பேர்க்ஷயரின் சல்ஹம்ஸ்ரெட்டில் கடந்த ஆண்டு ஒகஸ்ற் 15 ஆம் திகதி இரவு 11.30 அளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பாக விசாரணைசெய்யச் சென்றவேளையில் பொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் வாகனத்தினால் மோதிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட பல காயங்களால் பொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் உயிரிழந்தார்.

வாகனத்தைச் செலுத்திய 18 வயதான ஹென்றி லோங், பொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆன்ட்ரூ ஹார்ப்பர் படுகொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

லண்டன், ஓல்ட் பெய்லி நீதிமன்றில் நடந்த மனு விசாரணைக்கு பெல்மார்ஷ் சிறையிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் பேசிய ஹென்றி லோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

படுகொலைக் குற்றச்சாட்டுக் குறித்து 18 வயதான ஹென்றி லோங்கிடம் கேட்டபோது மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அத்துடன் நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இளம்பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை சைப்ரஸ் நீதிமன்றம் வழங்கியது!

Tue Jan 7 , 2020
x சைப்ரஸில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானதாகப் பொய்க் குற்றச்சாட்டுத் தெரிவித்த 19 வயதான பிரித்தானிய இளம்பெண்ணுக்கு மூன்று வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இத்தண்டனைக்கு எதிரான முறையீட்டை அவர் மேற்கொள்வார்  என்று அவரது […]

விழாக்கள்