ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுப்பதற்கு கோர்பின் முயற்சி!

கடந்த மாதம் பொதுத் தேர்தலில் கட்சி தோல்வியுற்ற போதிலும் பிரெக்ஸிற்றைத் தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதை இரண்டு ஆண்டுகளுக்கு தாமதப்படுத்துவதற்கான முயற்சியை தொழிற்கட்சி முன்னெடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரெக்ஸிற் சட்டத்தில் ஜெரமி கோர்பினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தம் வரும் வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளது.

தொழிற்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திருத்தம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைத் தடுப்பதற்கான கட்சியின் முயற்சியென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்திற்குள் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படா விட்டால் பிரெக்ஸிற் மாற்ற காலத்தை 2023 வரை நீடிப்பதற்கு கோரிக்கை விடுக்கும் தொழிற்கட்சியின் திருத்தம் கொன்சர்வேற்றிவ் பெரும்பான்மையைக் கொண்ட பொரிஸ் ஜோன்சனின் பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருட இறுதியில் நிறைவடையும் நடைமுறைக் காலத்தில் ஜூன் மாதத்துக்குள் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்குமாறு தொழிற்கட்சியின் திருத்தம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு புதிய தளபதி நியமனம்!

Fri Jan 3 , 2020
x ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் அமெரிக்காவால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துணைத் தளபதியான இஸ்மாயில் கானி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இன்று (வெள்ளிக்கிழமை) ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா […]

விழாக்கள்