நியூகாஸல் நோக்கிப் பயணித்த ஈஸிஜெற் விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தன்று ஸ்பெயினிலிருந்து நியூகாஸல் சென்ற ஈஸிஜெற் விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார்.

அலிகான்ரியில் இருந்து புறப்பட்டு நியூகாஸல் சென்ற EZY6418 என்ற ஈஸிஜெற் விமானத்தில் நேற்றையதினம் பயணி ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலதிக மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக விமானம் தரையிறங்கும் வேளை அவசர மருத்துவர்களை தயார்நிலையில் வைத்திருந்தபோதும் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு பயணி உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த பயணி குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஈஸிஜெற் நிறுவனம் தெரிவிக்கையில்; இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் பயணிகளின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன. மேலும் எங்களது ஆதரவையும் உதவிகளையும் அவர்களுக்கு வழங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வே எங்களது மிக உயர்ந்த முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜகார்த்தாவில் சீரற்ற காலநிலை – உயிரிழப்பு அதிகரிப்பு, பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

Thu Jan 2 , 2020
x இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான […]

விழாக்கள்