புது வருடத்துடன் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகிறது பிரித்தானியா! முக்கிய மாற்றங்களும் வருகிறது..

பிரித்தானிய அரசாங்கம் புது வருடத்துடன் தனது சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கொன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், தொடர்ந்தும் பொரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியில் நீடிக்கிறார்.

இந்நிலையில் பிறக்கும் புதிய ஆண்டிலிருந்து புதிய சட்டங்கள் மற்றும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கவும், கிக் பொருளாதார தொழிலாளர்களுக்கான புதிய உரிமைகள் மற்றும் வடக்கு அயர்லாந்தில் ஓரின சேர்க்கை திருமணம் மற்றும் கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை கொணர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனவரி 2-ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் ரயில் கட்டணங்கள் 2.7 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது. தொலை தூரத்தில் பணியாற்றும் மக்களுக்கு இந்த ரயில் கட்டண உயர்வானது 100 பவுண்டுகள் வரை இழப்பை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 13 ஆம் திகதி வடக்கு அயர்லாந்தில் இதுவரை தடை செய்யப்பட்டுள்ள ஓரின சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக மாற்றப்படுகிறது.

மார்ச் 2 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஆல்கஹால் விலையை நிர்ணயிக்கும் புதிய சட்டத்தை வெல்ஷ் அரசு அமுலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது

மார்ச் 31 ஆம் திகதி முதல் வடக்கு அயர்லாந்தில் பெண்கள் சட்ட அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் மனை உரிமையாளர்கள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளில் எவரும் இல்லை என்றால், கவுன்சில் வரி 50% அதிகரிக்கும் என்ற நிலையில், ஏப்ரல் முதல், அந்த தொகை 100% ஆக அதிகரிக்கிறது – நீண்ட காலமாக காலியாக இருக்கும் வீடுகளுக்கான கட்டணத்தை இரட்டிப்பாக்குகிறது.

எவ்வாறாயினும் ஏப்ரல் முதல் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிணற்றிலிருந்து இளைஞர் சடலமாக மீட்பு! விசாரணையில் பொலிஸார்

Tue Dec 31 , 2019
x திருகோணமலை- பாரதிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிளிவெட்டி, 58, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாகரன் கிஜோதன் எனவும் தெரியவருகின்றது. […]

விழாக்கள்