சித்தார்த்தின் ‘டக்கர்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஷால்

சித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘டக்கர்’. இந்த படத்தை கப்பல் பட இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக ‘மஜிலி’ படத்தில் நடித்த திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை போராட்டம் இருக்கும் – வைரமுத்து

Tue Dec 24 , 2019
x குடியுரிமை சட்டத் திருத்தம் இந்தியாவின் அடிப்படையை பொடிப் பொடியாக்கி இருப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அத்துடன்,  ‘ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை போராட்டம் இருக்கும் என்றும் சிலர் போராட்டம் என்றும்,  சிலர் வன்முறை என்றும் […]

விழாக்கள்