சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார்கள் : ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார் நளினி!

தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ளதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில்,  கடந்த 28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில்,  10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3000க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை  2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.அத்துடன் அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர்,  இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும்  அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.குறித்த மனு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது!

Sat Dec 14 , 2019
x மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை […]

விழாக்கள்