பிறப்பால் நானும் ஒரு தமிழன்! லண்டன் வாழ் பிரபல தொழிலதிபர் ரிச்சர் பெருமிதம்

பிறப்பால் தான் ஒரு தமிழன் என லண்டனை தலைமையகமாக கொண்ட விர்ஜின் குழுமத்தின் நிறுவனர் ரிச்சர் ப்ரான்ஸன் தெரிவித்துள்ளார்.ரிச்சர் ப்ரான்ஸன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், “ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எனது உயிரணுவை பரிசோதித்தபோது நான் தமிழர்களோடு ஒன்றுபட்ட டி.என்.ஏவை கொண்டிருப்பது தெரிய வந்தது.

ஒவ்வொரு தமிழரையும் பார்க்கும்போது இவர் நமது உறவுக்காரராக இருக்கலாம் என நினைத்துக் கொள்வேன்.என்னுடைய மூதாதையர்கள் 1793ல் தமிழகத்தில் உள்ள கடலூரில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அப்போது எனது மூதாதையரில் ஒருவர் தமிழ்பெண்ணான ஆர்யா என்பவரை மணம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை – மத்திய அரசு

Sat Dec 14 , 2019
x குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,  பங்களாதேஷ்  போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை […]

விழாக்கள்