“பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்” ஜனாதிபதி செயலகம் அவசர எச்சரிக்கை

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்து, பொதுமக்கள் மீது அழுத்தங்கள், அச்சுறுத்தல், தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறுகின்ற விடயங்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்தும் ஜனாதிபதி செயலகத்தில் பதவி வகிப்பதாக குறிப்பிட்டும் சில நபர்களால் பொதுமக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல் மற்றும் தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் குறிப்பிடுதல் போன்ற பல்வேறு மோசடி செயல்கள் இடம்பெறுவதாக அறியக் கிடைத்துள்ளது.

இவ்வனைத்து செயற்பாடுகளும் ஜனாதிபதியினதும் ஜனாதிபதி செயலகத்தினதும் அனுமதியின்றியே இடம்பெற்றுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தயவுடன் அறியத்தரும் அதேவேளை,

அத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தகவலறியக் கிடைப்பவர்கள் தாமதமின்றி உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிறப்பால் நானும் ஒரு தமிழன்! லண்டன் வாழ் பிரபல தொழிலதிபர் ரிச்சர் பெருமிதம்

Sat Dec 14 , 2019
x பிறப்பால் தான் ஒரு தமிழன் என லண்டனை தலைமையகமாக கொண்ட விர்ஜின் குழுமத்தின் நிறுவனர் ரிச்சர் ப்ரான்ஸன் தெரிவித்துள்ளார்.ரிச்சர் ப்ரான்ஸன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே […]

விழாக்கள்