Home Sports - விளையாட்டு செய்திகள் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளம் தொடர்ந்தும் முன்னிலை!

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளம் தொடர்ந்தும் முன்னிலை!

33
0

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்காரா நகரங்களில் நேற்று (திங்கட்கிழமை) தொடக்கம் நடைப்பெற்று வருகின்றன.

இதன்படி, இதுவரை நிறைவடைந்த போட்டிகளின் அடிப்படையில் இலங்கை குழாம் 5 தங்கப்பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களுடன் 35 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது.

இந்த போட்டித் தொடரின் முதல் நாளில் நடைப்பெற்ற டைக்கொண்டோ போட்டியின் ஆண்கள் பிரிவில் ரணுக்க பிரபாத் அபாரமாக விளையாடி இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார்.

இதேபோட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இலங்கை தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.முதல் நாளில் இலங்கை சார்பாக பதக்கங்களை பெற்ற விளையாட்டாக டைக்கொண்டோ திகழ்கின்றது.

இந்தப் போட்டியில் இலங்கை முதல் தங்கத்தை வென்றதோடு 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 9 பதக்கங்களை அள்ளியுள்ளது.

இதேவேளை, கராத்தே போட்டியில் இலங்கைக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. கராத்தே போட்டிப் பிரிவில் இலங்கை இதுவரையில் ஒரு வெள்ளிப்பதக்கமும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் நான்கு பதக்கங்களை வென்றெடுத்துள்ளது.

இதனிடையே, கரப்பந்தாட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை இலங்கை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதக்கப்பட்டியலில் 19 தங்கம் 5 வெள்ளி 9 வெண்கலப் பதக்கங்களுடன் நேபாள அணி மொத்தமாக 33 பதக்கங்களை பெற்று தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி 10 தங்கம் 12 வெள்ளி 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 27 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பாக்கிஸ்தான் 2 தங்கப்பதக்கங்களையும், 5 வெள்ளிப் பதக்கங்களையும், 8 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மொத்தமாக 15 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

அதேவேளை, பங்களாதேஸ் மற்றும் மாலைதீவு அணிகள் தலா ஒரு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளன.பூட்டான் அணி ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தை மாத்திரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here