சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சம்!

அம்பாறை மாவட்டதில் அண்மைக் காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடார்த்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும், நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

மீன்பிடியை நம்பி வாழ்வை நடாத்தி வரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவு செய்து கடலுக்கு சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகினறது. இது குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நீரோட்டத்தின் வேகம் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுகிறது. இதனால் கரையோர மீன்பிடி முற்றாக பாதிக்கப்படுகின்றது.

மீனின் விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ,கடற்றோழில் மீன்பிடியை நம்பியுள்ள மீனவைகள் பல மூலதனங்களை செலவு செய்து நாள் முழுவதும் கடலில் தொழிலுக்கு சென்று வெறுங்கையோடு திரும்புவதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்கையை நாடாத்திவருவதாக மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆழ் கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்கள் பத்தாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை செலவழித்து கடலுக்கு செல்கின்றனர். ஆழ் கடலில் நீரோட்டத்தில் அடிக்கடி ஏற்படும் சுழலினால் வலைகள் சுருட்டப்பட்டு மீண்டும் மீன்பிடிக்க முடியாத நிலைக்கு வலைகள் நாசமாகின்றன என எமக்கு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

Tue Dec 3 , 2019
x தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், 12 தமிழர்களுக்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் […]

விழாக்கள்