வம்புக்கு இழுத்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த மனோ கணேசன்

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தமது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

அரசியல் சார்ந்த விடயமானாலும், சமூகம் சார்ந்த விடயமானாலும் அவர் பகிரங்கமாக பதிவிடுவார்.

இந்த நிலையில் “உங்களுடைய அனைத்து பதிவுகளும் விலங்கிகொல்வதற்கு மிகவும் கடினம். தயவு செய்து உங்கள் கருத்துக்களை முறையாக பதிவிடுங்கள்.” என ஒருவர் வம்புக்கு இழுத்துள்ளார்.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த மனோ,

“நான் என் தமிழை முறையாக பேசி எழுதுவதால்தான் உங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என எண்ணுகிறேன். இனிமேல் எனக்கு என் தாய்மொழி தமிழை புதிதாக கற்க முடியாது. விளங்காவிட்டால் விட்டு விடுங்கள். என்னை தொடராதீர்கள். நன்றி. (உங்கள் பதிவில் இரு தமிழ் எழுத்து பிழைகள் உள. திருத்திக்கொள்க!)” என பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பில் இந்நாள் பிரதமரின் செயலாளர்!

Tue Dec 3 , 2019
x ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறித்து அவரின் செயலாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். ரணிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட வேண்டுமென […]

விழாக்கள்