மனிஷ் பாண்டேவை கரம்பிடித்தார் உதயம் NH 4 நாயகி

உதயம் NH 4 படம் மூலம் தமிழில் அறிமுகமான அஷ்ரிதா ஷெட்டி பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை மும்பையில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

உதயம் NH 4 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஷ்ரிதா ஷெட்டி, அதற்கு பின்னர் ஒரு கன்னியும் 3 களவாணியும், இந்திரஜித், நான் தான் சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நீயும் இவ்வளவு பெரிய நடிகனா வருவேன்னு எதிர்பார்க்கல” : யோகியிடம் கேட்கும் சந்தானம்!

Mon Dec 2 , 2019
x “நீயும் இவ்வளவு பெரிய நடிகனா வருவேன்னு எதிர்பார்க்கல, என்னமா ஆக்ட் கொடுக்குற” என்று யோகிபாபுவை பார்த்து சந்தானம் பேசும் வசனங்களுடன் “டக்கால்டி” திரைப்படத்தின்  டீசர் வெளியாகியுள்ளது. சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென், ராதாரவி, […]

விழாக்கள்