ஈரானின் மிரட்டல் குறித்து அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேல் பிரதமரும் ஆலோசனை!

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேல் பிரதமரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரான் நாட்டின் மிரட்டல் குறித்தும் அதே வேளையில் இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டுமென, அந்நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றது.

ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்கா நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியை விரைவு படுத்தியது.

சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இலங்கைக்கு இதுவரை 14 பதக்கங்கள்

Mon Dec 2 , 2019
x 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய நகரங்களில் நடைப்பெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான விளையாட்டு விழாவைத் தொடர்ந்து போட்டிகள் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகின. இன்று மாலை […]

விழாக்கள்