ஆங்கில பாடத்தை வாசிக்கத்தெரியாத இரண்டு ஆசிரியர்கள் அதிரடியாக பணிநீக்கம்!

அரசாங்க பாடசாலையொன்றில் ஆங்கில பாடத்தை வாசிக்கத் தெரியாத இரண்டு ஆசிரியர்களை அதிரடியாக பணியிடை நீக்கம்செய்துள்ளார் மாவட்ட ஆட்சியாளர்.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட சிகந்தர்பூரில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

அரசாங்க நடுநிலைப்பள்ளி ஒன்றில் அண்மையில் மாவட்ட ஆட்சியர் தேவேந்திர பாண்டே திடீரென ஆய்வுக்கு சென்றார். அப்போது ஆங்கில பாடம் நடந்து கொண்டிருந்த ஒரு வகுப்பறைக்கு சென்ற அவர், மாணவர்களின் ஆங்கில பாடப்புத்தகத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை வாசிக்குமாறு மாணவர்களிடம் கூறினார்.

ஆனால் எந்த மாணவருக்கும் அந்த பகுதியை வாசிக்க தெரியவில்லை. உடனே அவர் வகுப்பறையில் இருந்த துணை ஆசிரியர் ராஜ்குமாரியிடம் அந்த பகுதியை வாசிக்குமாறு கூறினார். ஆனால் அவருக்கும் வாசிக்க தெரியாததால், மூத்த ஆசிரியை சுசிலா பாரதியிடம் அந்த பகுதியை வாசிக்க கொடுத்தார். ஆனால் அவராலும் வாசிக்க முடியவில்லை.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தேவேந்திர பாண்டே அந்த 2 ஆசிரியர்களையும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழ் நகருக்குள் இப்படி ஒரு அவலம்! மக்கள் கடும் விசனம்

Mon Dec 2 , 2019
x யாழில் நன்னீர் குளம் ஒன்றுக்குள் மருத்துவ கழிவுகள் வீசப்பட்டு உள்ள நிலையில் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். பிறவுண் வீதியில் […]

அதிகம் படித்தவை

விழாக்கள்