மணமக்களின் ஊர்வலத்தில் கொட்டிய லட்சரூபா பணமழை!

ரூபா.90 லட்சம் பணத்தை மழையாக கொட்டி, மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷிராஜ்சிங் ஜடேஜா என்பவரே தனது திருமண ஊர்வலத்தில் ரூ.90 லட்சத்தை பண மழையாக கொட்டியவராவார்.

கடந்த 30ம் திகதி நடைபெற்ற அவரது திருமணத்தின் போது மணமக்கள் ஊர்வலம் நடந்தது. இதன்போது திடீரென பண மழை கொட்டியது.

மாப்பிள்ளையின் குடும்பத்தினரும், நண்பர்களும் பணத்தை வாரி இறைத்தனர். பண மழையில் நனைந்த மணமக்கள் பின்னர் ஹெலிகொப்டர் மூலம், கண்ட் என்ற கிராமத்துக்கு பறந்து சென்றனர்.

மாப்பிள்ளையின் அண்ணன் மணமக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான காரையும் பரிசளித்துள்ளார். இந்தத் திருமணத்தில் வசூலான நன்கொடைகள் 5 கோசாலைக்கு தானமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆங்கில பாடத்தை வாசிக்கத்தெரியாத இரண்டு ஆசிரியர்கள் அதிரடியாக பணிநீக்கம்!

Mon Dec 2 , 2019
x அரசாங்க பாடசாலையொன்றில் ஆங்கில பாடத்தை வாசிக்கத் தெரியாத இரண்டு ஆசிரியர்களை அதிரடியாக பணியிடை நீக்கம்செய்துள்ளார் மாவட்ட ஆட்சியாளர். இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட சிகந்தர்பூரில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றிலேயே இந்த […]

அதிகம் படித்தவை

விழாக்கள்