கல்முனைக்கு சென்ற வான் விபத்து – 9 பேர் கவலைக்கிடம்!

ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் படுகாயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த மற்றுமொரு வரப்பிரசாதம்!

Mon Dec 2 , 2019
x யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக கலாநிதி தெ. தபோதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்பாட்டுக்கு வரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. […]

விழாக்கள்