நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்துக்கும் மூடுவிழா!

நித்யானந்தாவின் ஆசிரமம் மீது தொடர்ச்சியான புகார்கள் வந்ததையடுத்து,குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு சொந்தமாக ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்களான லோபமுத்ரா சர்மா (21) மற்றும் நந்திதா சர்மா (18) ஆகியோரை மீட்டுத் தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றததில், ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன இளம்பெண்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளித்து டிசம்பர் 10ம் திகதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர். அதன்பின்னர் குஜராத் பொலிசார், பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் ஹீராபூரில் உள்ள பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் இன்று மூடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கல்முனைக்கு சென்ற வான் விபத்து - 9 பேர் கவலைக்கிடம்!

Mon Dec 2 , 2019
x ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒன்பது […]

அதிகம் படித்தவை

விழாக்கள்