குடியிருப்பு தொகுதி சுவர் இடிந்து வீழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் பரிதாப மரணம்!

தற்போது தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக வீடுகளின்சுவர்கள் இடிந்து விழுந்ததில் உறக்கத்திலிருந்த 17 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதி குடியிருப்பிலேயே இந்த பரிதாபகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக குறித்த கொலனியில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் வீட்டு சுவர்கள் கடும் ஈரலிப்பை அடைந்தன.இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் நான்கு வீடுகளின் சுவர்கள் இடிந்து வீழ்ந்தன.

இதில் உறக்கத்திலிருந்த 17 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.அத்துடன் சம்பவ இடத்தில் காயமடைந்தவர்கள் மிட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

3 நாட்களில் காலி முகத்திடல் மாற வேண்டும்! புதிய அமைச்சர் உத்தரவு

Mon Dec 2 , 2019
x துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இன்னும் 3 நாட்களில் காலி முகத்திடல் மாற வேண்டும்.அழகிய காலி முகத்திடலாக மாற்ற வேண்டும் […]

விழாக்கள்