இறந்த பின்னரும் பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமை! அறிக்கையில் வெளிவந்த பதை பதைக்கும் சம்பவம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பிரியங்கா கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவர் பார்வையையும் திருப்பியுள்ளது.

நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலமாக இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பிரியங்காவின் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதால் நிற்கவே, முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்ன கேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு உதவி செய்வது போல வந்துள்ளனர்.

பின்னர், போதை கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை தலையில் அடித்து மயக்கமுறச் செய்துள்ளனர்.பின்னர் லொறியினுள் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கொலை செய்த பிறகும், நால்வரும் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். லொறியின் அறைக்குள் வைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இதன் பின்னர் பிரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லொறியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர்.

சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி அதன்படியே செய்தும் முடித்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹ்புப்நகர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பிலும் அவ்வாறே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவரின் கொலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் மக்களிடையே, முக்கியமாக பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களை நடுநடுங்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழ் போதனா வைத்தியசாலையில் யார் இந்த மருத்துவர் சத்தியமூர்த்தி? வெளிவரும் நெகிழ்ச்சியான பதிவுகள்

Mon Dec 2 , 2019
x யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த வேளை 2015ஆம் ஆண்டு அதன் பணிப்பாளராக பொறுப்பேற்றார் மருத்துவர் சத்தியமூர்த்தி. அவரது விடாமுயற்சி கடின உழைப்பால் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கிறது. யுத்த […]

விழாக்கள்