சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையிலேயே சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மெக்ஸிகோவில் மீண்டும் துப்பாக்கி மோதல் – 4 பொலிஸார் உட்பட 14 பேர் உயிரிழப்பு

Sun Dec 1 , 2019
x மெக்ஸிகோவில் ஆயுதமேந்திய கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பொலிஸார் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள மெக்ஸிகோவின் கோஹுய்லா மாநிலத்திற்குட்பட்ட வில்லா யூனியன் […]

விழாக்கள்