மறைமுகப் போரில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தானுக்கு தோல்வி நிச்சயம்- ராஜ்நாத்சிங்

இந்தியாவுடன் மறைமுகப் போர் நடத்திவரும் பாகிஸ்தான் நிச்சயம் தோல்வியடையுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

புனேயில் நடைபெற்ற இராணுவ பயிற்சி பெற்றவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1948ஆம்  ஆண்டு முதலே இந்தியா -பாகிஸ்தான் இடையே முரண்பாடுகள் வலுத்து வந்துள்ளதையும் ராஜ்நாத்சிங்  சுட்டிக்காட்டினார்.

அத்துடன் 1965, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தாவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்தியாவை  வெல்ல முடியாத பாகிஸ்தான், மறைமுகப் போர் தொடுத்து வருகிறது. ஆனால் அதுவும் தோல்வியையே அடையுமெனவும்  ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அமெரிக்காவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு.

Sun Dec 1 , 2019
x அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான ‘பிலாட்டஸ் பி.சி.12’ ரகத்தை சேர்ந்த சிறிய […]

அதிகம் படித்தவை

விழாக்கள்