தெலுங்கானாவில் பெண் வைத்தியர் கொல்லப்பட்ட விவகாரம்- 3 பொலிஸார் பணி நீக்கம்.

தெலுங்கானா மாநிலத்தில் பெண் வைத்தியர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய ஷம்ஷாபாத் உதவி ஆய்வாளர் உட்பட மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம்- மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது-26). ஹைதராபாத்- மாதப்பூர் கால்நடை அரசு வைத்தியசாலையில்  வைத்தியராக பணியாற்றி வந்த இவரை, கடந்த புதன்கிழமை இரவு, லொறி சாரதி, அவரது உதவியாளர் உட்பட சிலர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்றனர்.

பின்னர் அவரது உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.  இதில் முக்கிய குற்றவாளி முகமது பாஷா மற்றும் சிவா, நவீன், சென்னகேவலு ஆகியோர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அப்பெண் காணாமல் போனமை குறித்து ஷம்ஷாபாத் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்தபோது, முதல் த‌கவல் அறிக்கையை பதிவு செய்ய தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது‌.

இது குறித்து சைபராபாத் பொலிஸ் ஆணை‌யாளர் விசாரணை மேற்கொண்ட ‌நிலையில், உதவி ஆய்வாளர் ரவிகு‌மார்,  தலைமை பொலிஸ் அதிகாரிகள் வேணு கோபால்‌ மற்றும் சத்ய நாராயண கவுடா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மறைமுகப் போரில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தானுக்கு தோல்வி நிச்சயம்- ராஜ்நாத்சிங்

Sun Dec 1 , 2019
x இந்தியாவுடன் மறைமுகப் போர் நடத்திவரும் பாகிஸ்தான் நிச்சயம் தோல்வியடையுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். புனேயில் நடைபெற்ற இராணுவ பயிற்சி பெற்றவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து […]

விழாக்கள்