Home srilanka - இலங்கை செய்திகள் வவுனியாவில் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் கைது

வவுனியாவில் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் கைது

32
0

வவுனியா- பூந்தோட்டம், அண்ணாநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்த போதே  சகோதரர்களான 16, 19, 21 வயதுடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, சவல் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here