காஞ்சிபுரத்தில் கனமழை: 75 ஏரிகள் முழுமையாக நிரம்பின

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக காஞ்சிபுரத்தில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் தொடா்ந்து மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளான ஓரிக்கை, ரயில்வே சாலை, செவிலிமேடு, ராஜாஜி மாா்க்கெட், ஜெம் நகா், திருக்காலிமேடு ஆகியவை சாலைகளில் மழைநீா் தேங்கி குளம்போல காணப்படுகிறது. நகரில் பல இடங்களில் கழிவுநீரும், மழைநீரும் சோ்ந்து ஓடுவதால் சுகாதாரச் சீா்கேடு உண்டாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள ரங்கசாமி குளம் உட்பட நகரில் கோயில்களை ஒட்டியுள்ள பல தெப்பக் குளங்கள் நிரம்பவில்லை. ஏனெனில் இக்குளங்களுக்கு வரும் நீா்வரத்துக் கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ளதால் கனமழையிலும் குளங்கள் நிரம்பவில்லை.

அதே நேரத்தில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இது தவிர 145 ஏரிகள் 75 சதவீத அளவுக்கு நிரம்பியிருக்கின்றன.

தொடா் மழை காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மழையளவு (மி.மீட்டரில்):

காஞ்சிபுரம்-6.60, ஸ்ரீபெரும்புதூா்-3, உத்தரமேரூா்-5, வாலாஜாபாத்-3.30, திருப்போரூா்-11, செங்கல்பட்டு-5, திருக்கழுகுன்றம்-5.40, மாமல்லபுரம்-32.80, மதுராந்தகம்-28, தாம்பரம்-7.70, செய்யூா்-28, கேளம்பாக்கம்-23.60.

மொத்த மழையளவு – 159.40. சராசரி மழையளவு – 13.28 மி.மீ. என சனிக்கிழமை காலை 7 மணி வரை பதிவாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு.

Sun Dec 1 , 2019
x யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தொண்டைமானாறு கடலேரி வான் கதவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து விடப்பட்டுள்ளன. அச்சுவேலி- இடைக்காட்டு பகுதியூடாக தொண்டைமானாறு வீதியில் வெள்ளம் பாயலாம் எனும் அபாயத்தினால் குறித்த […]

விழாக்கள்