குளிர் பருவத்தில் வெப்பநிலை வழக்கத்தைவிட சராசரியாக ஒரு டிகிரி செல்சியஸ் அளவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் முதல் பெப்ரவரி வரையில் நிலவும் வெப்பநிலை குறித்த முன்கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்த குளிர் பருவத்தில் வெப்பநிலை வழக்கத்தைவிட சராசரியாக ஒரு டிகிரி செல்சியஸ் அளவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் தென்னிந்திய பகுதிகளில் காற்று ஈரப்பதத்தின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் இந்தியா முழுவதும் மேகமூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் சூரியக்கதிர்கள் ஊடுருவி வருவது அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றமும் வெப்பநிலை சற்று அதிகரித்துக் காணப்படுவதற்கு காரணமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.