நொய்டா சர்வதேச கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் ஒப்பந்தத்தை சுவிஸ் நிறுவனம் கைப்பற்றியது!

டெல்லி அருகே அமையவுள்ள இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமான நொய்டா சர்வதேச கிரீன்ஃபீல்டு விமான நிலையத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, சுவிட்சர்லாந்து நிறுவனம் பெற்றுள்ளது.

ஜீவார் விமான நிலையம் என்று குறிப்பிடப்படும், நொய்டா சர்வதேச கிரீன்ஃபீல்டு விமான நிலையம், 29 ஆயிரத்து 560 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தைப் பெற அதானி, டயல் எனப்படும் டெல்லி இன்டர்நேசனல் ஏர்போர்ட் போன்ற நிறுவனங்கள் போட்டியிட்டன.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜூரிச் ஏர்போர்ட் இன்டர்நேசனல் என்ற நிறுவனம் குறித்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

டெல்லி தலைநகரில் இந்திராகாந்தி, ஹிண்டன் ஆகிய இரு விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவதாக உருவாகவுள்ள ஜீவார் விமான நிலையம், உத்தரப்பிரதேசத்தின் கவுதம் புத்தா மாவட்டத்தில் அமைகிறது.

விமான நிலையத்தின் முதல் கட்டம் 1334 ஹெக்டேரில் பரப்பளவில் 4 ஆயிரத்து 588 கோடி ரூபாய் செலவில், 2023ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தில் 6 முதல் 8 ஓடுதளங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sat Nov 30 , 2019
x குளிர் பருவத்தில் வெப்பநிலை வழக்கத்தைவிட சராசரியாக ஒரு டிகிரி செல்சியஸ் அளவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் முதல் பெப்ரவரி வரையில் நிலவும் வெப்பநிலை குறித்த  […]

விழாக்கள்