தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல், சர்கார், பிகில் என அனைத்து படங்களும் மிகப்பெரும் வசூல் சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் விஜய் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டது, அதற்காக ரசிகர்கள் இரத்தத்தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் பல விஜய் ரசிகர்கள் கலந்துக்கொண்டு இரத்தம் கொடுக்க, அவர்களை சிறப்பித்து ஒரு பரிசும் கொடுக்கப்பட்டது. இதற்கு எல்லோரிடத்திலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.