Home Cinema - சினிமா செய்திகள் ஜெயலலிதா வேடத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன்- நித்யாமேனன்

ஜெயலலிதா வேடத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன்- நித்யாமேனன்

47
0

ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் ‘த அயன் லேடி’ படத்தில் நடிக்கும் நித்யாமேனன், ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை, தலைவி என்ற பெயரிலும், த அயன் லேடி என்ற பெயரிலும் படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். த அயன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து நித்யா மேனன் அடிக்கடி பேசி வருகிறார்.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், “ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூரில் படித்து இருக்கிறோம்.

மேலும் பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம் உள்ளிட்ட விடயங்களில்  ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதனை இயக்குனர் பிரியதர்ஷினியும் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்.

அத்துடன் ஜெயலலிதா மாதிரி நானும் பிடிக்காத விடயங்களை  உடனடியாக  சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் இருக்கிறது.

அதனால்தான் ஜெயலலிதா பற்றி அதிகம் கேட்டு தெரிந்து கொள்கிறேன். அவர் மாதிரியே நடிக்கவும் என்னை தயார் செய்து வருகிறேன். ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அந்த வேடத்தில் நடிக்க எனது 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here