சிம்பு மீது ஈர்ப்பு: நம்பிக்கையுடையவர் கணவனாக வரவேண்டும் -பிரபல நடிகை

ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர், தனக்கு நடிகர் சிம்பு மீது ஈர்ப்பு இருப்பதாக  கூறியுள்ளார்.

பேராண்மை, அரவாண், பரதேசி, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை தன்ஷிகாவே பேட்டியோன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் தன்ஷிகா நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு வரவேண்டிய கணவர் நம்பிக்கையுடையவராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் வெளியான காலக்கூத்து படத்தினை தொடர்ந்து தற்போது கிட்னா, யோகிடா, இருட்டு ஆகிய படங்களில் நடிகை தன்ஷிகா நடித்து வருகிறார். அவர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். கபாலி படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

17 வெளிநாட்டு தூதுவர்களை நாடு திரும்புமாறு ஆர்ஜென்ரினா உத்தரவு

Sun Nov 24 , 2019
x ஆர்ஜென்ரினாவின் 17 வெளிநாட்டு தூதுவர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டின் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஆல்பர்டோ பெர்னாண்டோஸ் அடுத்த மாதம் 10ஆம் திகதி பதவி ஏற்க உள்ள நிலையில் தற்போதைய […]

விழாக்கள்