Home Britania - பிரித்தானிய செய்திகள் துருவ காற்று தாக்கும் என எதிர்வு கூறல்!

துருவ காற்று தாக்கும் என எதிர்வு கூறல்!

35
0

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குளிர்ந்த துருவ காற்று தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.ஐரோப்பிய வானிலை மையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இவ்வாறு குளிர்ந்த துருவ காற்று தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வார இறுதியில் அட்லாண்டிக்கிலிருந்து பயணிக்கும் புயல் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘சிசிலியா’ என குறித்த புயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புயல் கன்டாப்ரியன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் அலைகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here