யாழ் – கதிர்காம் வரை சமாதானத்தை வலியுறுத்தி இராணுவத்தினர் நடைபயணம்

நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்திய யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரையில் படை வீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்தின் முதல் நாள் பரந்தனுடன் நிறைவடைந்தது.

யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட சமாதானத்தை வலியுறுத்தும் குறித்த நடை பயணம் கதிர்காமத்தில் நிறைவடைய உள்ளது.

படை வீரர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடை பயணமானது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை உண்டுபண்ணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாம் நாளான நாளை பரந்தனில் ஆரம்பிக்கப்பட்டு ஏ-9 வீதி ஊடாக தொடர்ந்தும் நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

“இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் வகையில் இந்த பயணம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கின்றோம். நாட்டின் கடமைகளை பொறுப்பேற்றுள்ள புதிய ஜனாதிபதி நாட்டில் உள்ள அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழும் வகையில் செயற்படுவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அந்த வகையில் அனைத்த இன, மத மக்களும் சாமாதானத்துடன் ஒற்றுமையாக வாழ்வதற்காக பிரார்த்திக்கிறோம்” என  இந்த நடை பணயத்தில் கலந்துகொண்ட படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

33 வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை தன்வசப்படுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு

Sun Nov 24 , 2019
x இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் தேர்தல்கள் திணைக்களத்தின் வசமானது. பிரதான வேட்பாளர்கள் இருவரையும் தவிர்ந்து ஏனைய 33 வேட்பாளர்களிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாயை தேர்தல்கள் ஆணைக்குழு பறிமுதல் […]

விழாக்கள்