தலைவி படத்தின் வௌியீட்டுத் திகதி அறிவிப்பு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் வௌியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கங்கனா ரணாவத் பிரத்தியேக பயிற்சி எடுத்து தலைவி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதேபோல், படத்தின் வௌியீட்டுத் திகதி அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் 2020 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி வௌியாகவுள்ளது.

இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.விப்ரி நிறுவனம் தலைவி படத்தை தயாரிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி

Sat Nov 23 , 2019
x தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.மரக்கறி வகைகளின் தொகை அதிகரித்துள்ளதால், விலைகள் குறைவடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது தாழ்நில மரக்கறி வகைகள் பல மத்திய நிலையத்திற்கு கிடைப்பதுடன், போஞ்சியும் […]

விழாக்கள்