தலைமை தளபதி குறித்த வைகோவின் கேள்விக்கு பதிலளித்தார் ஸ்ரீபத் நாயக்!

தலைமைத் தளபதி என்ற பொறுப்பை உருவாக்குவது குறித்து, கொள்கை அளவில் அரசு தீர்மானித்து உள்ளது. அதைச் செயல்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

தலைமை தளபதி என்ற புதிய பொறுப்பை உருவாக்க போகின்றீர்களா என ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் கேள்வியெழுப்பியிருந்தார். குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த ஸ்ரீபத் நாயக், தலைமைத் தளபதியின் பொறுப்புகள், அந்தப் புதிய பொறுப்பின் செயல்பாட்டு எல்லைகளை வரையறுப்பதும், இந்த முடிவை இணக்கமாகச் செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளையும் அந்தக் குழு ஆய்வு செய்து வருகின்றது.

கார்கில் மறுஆய்வுக் குழு, அமைச்சர்களின் ஆய்வு அறிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு குறித்த பணிக்குழு, சேகத்கர் குழு ஆகியவை மேற்கொண்ட ஆய்வுகளின்படி தலைமை தளபதி என்ற புதிய பொறுப்புகளை உருவாக்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் படைச் சீர்திருத்தப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு, சீர்திருத்த நடவடிக்கைகள் அமைகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.கவை வீழ்த்துவோம் – காங்கிரஸ் நம்பிக்கை!

Sat Nov 23 , 2019
x நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.கவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார். மஹராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து […]

விழாக்கள்