தமிழகத்தின் புதிய மாவட்டம் உதயம்!

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று (வெள்ளிக்கிழமை) உதயமாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, புதிய மாவட்டத்திற்கான ஆட்சியர், பொலிஸ் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று தென்காசியில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

புதிய மாவட்டத்திற்கான நிறைவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போராட்டத்தை கைவிட்டனர் தெலுங்கானாபோக்குவரத்து தொழிலாளர்கள்

Fri Nov 22 , 2019
x தெலுங்கானாவில் கடந்த 47 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை மீள பெற்றுக்கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிக்குத் திரும்பியுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு  பிரச்சினைகளை எழுப்பி […]

விழாக்கள்