சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்

ஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

நாடு திரும்புபவர்கள் பற்றிய மேலதிக விவரங்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடமுடியாது என்று கூறப்படுகின்றது.

வடகிழக்கு சிரியாவிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் நபர்கள் வரும் நாட்களில் பிரித்தானியாவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

எனினும் அங்கிருக்கும் தனது பிரஜைகளை மீள அழைத்துக்கொள்ள பிரித்தானியா தயக்கம் காட்டி வருகிறது.

சர்வதேச தரங்களின்படி சிரியாவில் வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்குத் தொடரப்படாவிட்டால் அப்பிரஜைகளின் நாடுகளே அவர்களைப் பொறுப்பேற்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றமை கட்டம் கட்டமாக நடைபெறுகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிரியா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் 1,200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கஸக்ஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், ரஷ்யா, கொசோவோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு!

Fri Nov 22 , 2019
x சுவிஸ் அரசாங்கம் புகையிலை மற்றும் நிக்கொற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மிகக் கவனக்குறைவுடன் செயல்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புகையிலைப் பயன்பாட்டைத் தடுப்பதற்கான மத்திய ஆணையகம் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. குறிப்பாக வேப்பிங் விதிகள் கடுமையாக […]

விழாக்கள்