திரையரங்குகளில் வெளியானது ‘ஆதித்யா வர்மா’ திரைப்படம்

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதித்யா வர்மா’ திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது.

எனினும் நேற்று சில வெளிநாடுகளில் இத்திரைப்படம் வெளியானது.

இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுது.

ரதன் இசையில் இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி  பல மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் ஈர்த்தது.

‘வர்மா தமிழ் பதிப்பு புதிய பெயரில் ‘ஆதித்யா வர்மா’ எனும் தலைப்புடன் இயக்குநர் கிரிசய்யா இயக்கியுள்ளார். ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் துருவிற்கு ஜோடியாக ஹிந்தியில் வருண் தவான் நடித்த ‘அக்டோபர்’ படத்தில் கதாநாயகி பனிதா சந்து நடித்துள்ளார்.

முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிவரும் அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்பட மொழியாக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்

Fri Nov 22 , 2019
x ஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு சிரியாவிலிருந்து பிரித்தானியப் பிரஜைகள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். நாடு திரும்புபவர்கள் பற்றிய மேலதிக விவரங்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடமுடியாது என்று கூறப்படுகின்றது. வடகிழக்கு சிரியாவிலிருந்து […]

விழாக்கள்