ஏழு வயதுச் சிறுமி வீடு மற்றும் உணவு கேட்டு கிறிஸ்மஸ் தந்தைக்கு கடிதம்

ஏழு வயதுச் சிறுமி தனது குடும்பத்திற்கு வீடு மற்றும் உணவு கேட்டு கிறிஸ்மஸ் தந்தைக்கு (Santa Claus) கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதம் லிவர்பூலின் எவரன்னில் உள்ள சமூக நிலையத்தின் கிறிஸ்துமஸ் அஞ்சல் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தைத் திறந்து படித்த கவுன்சிலர் ஜெரார்ட் வூட்ஹவுஸ் கூறுகையில்; இந்த விடயம் குறித்து தான் மிகவும் கவலையடைவதாகக் கூறினார்.

நான் குழந்தைகளை நன்கு அறிவேன் ஏழு வயதுக் குழந்தை கிறிஸ்துமஸ் பற்றி கவலைப்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது என்று அவர் கூறினார்.

அந்தக் கடிதத்தில் சிறுமி இவ்வாறு எழுதியுள்ளார். அன்புள்ள கிறிஸ்துமஸ் தந்தையே எங்களுக்கு உதவ முடியுமா?

நாங்கள் கிறிஸ்மஸுக்கு ஒரு வீட்டைப் பெற்றுக்கொள்ளலாமா? நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று அம்மா விரும்புகிறார். நீங்கள் எங்களுக்கு கொஞ்சம் உணவு கொடுக்க முடியுமா, கிறிஸ்மஸுக்கு ஒரு நல்ல பொம்மையை நான் பெற்றுக்கொள்ளலாமா? நன்றி என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

சமூக நிலையத்திற்கு வருகை தரும் குழந்தைகள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை இடுவதற்காக ஒரு அஞ்சல் பெட்டி அங்கு வைக்கப்பட்டிருந்தது.

சமூக நிலையத்தில் உள்ள குழு பண்டிகை காலத்திற்காக அந்த நிலையத்தினை அலங்கரிக்கத் தொடங்கியபோது அந்த அஞ்சல் பெட்டியில் இருந்து இக்கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலர் ஜெரார்ட் வூட்ஹவுஸ் மேலும் கூறுகையில்; சிறுமிக்கு 4 மற்றும் 10 வயதுடைய இரண்டு சகோதரிகள் உள்ளனர், அவர்கள் தற்போது உறவினர்களின் வீட்டில் வசித்து வருகின்றனர்.

சமூக நிலையக் குழு அந்தக் குடும்பத்திற்கு உதவ முயற்சி செய்கின்றது. அத்துடன் கிறிஸ்மஸ் தினத்தன்று அவர்களை ஒரு ஹோட்டலில் தங்க வைக்கலாம் என்று விரும்புகின்றது.

இந்தக் குழந்தைகளுக்கு உதவ யாரும் இல்லை என்பது குறித்து தனக்கு ஆச்சரியமாக இல்லை என்றும் இது தொடர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்றும் கூறினார்.

சில வாரங்களுக்கு முன்பு நாங்கள் இந்த நிலையத்தில் சில குழந்தைகளுடன் அமர்ந்திருந்தோம் அப்போது ஒரு குழந்தை நான் இந்தக் கிறிஸ்மஸைக் கொண்டாட விரும்புகிறேன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

தங்கள் பெற்றோருக்கு கிறிஸ்மஸ் பரிசுக்காக இந்த ஆண்டு பணம் கிடைக்கவில்லை என்பது இந்தக் குழந்தைகளுக்கு நன்கு தெரியும்.

இது எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் உணர்கின்றோம். இது மிகவும் வருத்ததுக்குரியது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திரா காந்தியின் பிறந்தநாள்: சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை

Tue Nov 19 , 2019
x முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள், இன்று (செவ்வாய்க்கிழமை)  இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் […]

அதிகம் படித்தவை

விழாக்கள்